search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தோஷம் கழிப்பதாக கூறி ரூ.14 ஆயிரம் அபேஸ் செய்த சாமியாரை தேடும் பணி தீவிரம்
    X

    சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தோஷம் கழிப்பதாக கூறி ரூ.14 ஆயிரம் அபேஸ் செய்த சாமியாரை தேடும் பணி தீவிரம்

    • நான் வீட்டிற்குள் சென்று தண்ணீர் தெளித்து வந்த போது சாமியார் மாயமாகி விட்டார்
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி நெசவாளர் காலனி பகுதி யில் காவி உடை அணிந்து சாமியார் போல் வந்த ஒருவர், தோஷம் கழிப்பதாக கூறி முதியவர் ஒருவரை ஏமாற்றி ரூ.14 ஆயிரம் அபேஸ் செய்த சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து பணத்தை இழந்த கிருஷ்ணன் (வயது 72) போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி லெட்சுமி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு உள்ளார்.இந்த நிலையில் தான் சம்பவத்தன்று காவி உடை சாமியார் வந்தார். அவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. அதை கழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்.

    இதனை நம்பி அவர் கேட்டபடி ரூ. 14 ஆயிரம் மற்றும் செம்பு தண்ணீர் கொடுத்தேன். பின்னர் தான் மந்திரித்து விட்டதாகவும், செம்பு தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து வாருங்கள் என்றும் கூறினார். அதன்படி நான் வீட்டிற்குள் சென்று தண்ணீர் தெளித்து வந்த போது சாமியார் மாயமாகி விட்டார். அப்போது தான் ஏமாற்றப்பட்ட விவரம் தெரிய வந்தது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடி செய்த சாமியாரை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காவி சாமியார், இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது. அதை வைத்து அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×