search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலச்சூரங்குடி சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
    X

    மேலச்சூரங்குடி சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

    • மாலை 5 மணிக்கு 108 பானை சர்க்கரை பொங்கல் வழிபாடு நடக்கிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    மேலச்சூரங்குடியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (27-ந்தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 31-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை மூல மந்திர ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் காலை 8 மணிக்கு சிற்றுண்டி நடக்கிறது. தொடர்ந்து 28, 29, 30-ந்தேதிகளில் சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி அன்று காலை 7 மணிக்கு ஆதிலிங்க விநாயகர் கோவிலில் இருந்து சிங்காரி மேளத்துடன் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வருதல் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மற்றும் மதியம் அன்னதானம் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு 108 பானை சர்க்கரை பொங்கல் வழிபாடு நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×