search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 26-ந் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதி
    X

    கன்னியாகுமரியில் 26-ந் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதி

    • ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 26-ந் தேதி அதிகாலை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைகிறது.
    • அமைச்சர்கள் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாசிடம் வழங்குகின்றனர்.

    நாகர்கோவில் :

    44-வது செஸ் ஒலிம்பியாட் உலக போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளது. இதன் ஒருபகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 26-ந் தேதி அதிகாலை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை வந்தடைகிறது.

    தொடர்ந்து காலை 6.30 மணிக்கு காந்தி மண்டபத்தில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அமைச்சர்கள் ஒலிம்பியாட் தீபத்தினை கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாசிடம் வழங்குகின்றனர்.

    ஒலிம்பியாட் தீபமானது திருவள்ளுவர் சிலைக்கு கொண்டு சென்று சிலையை சுற்றி வலம் வர உள்ளது. தொடர்ந்து அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடை பெற உள்ளது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலேக்டர்அரவிந்த். தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் டேவிட் டேனியல் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×