search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
    X

    கோப்பு படம் 

    நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

    • ஆயத்த ஆடைகள்-பட்டாசுகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
    • வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்ததால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

    நாகர்கோவில்:

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி.

    புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக புதிய துணி வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

    வீட்டில் இருக்கும் உறவினருக்கு ஆடைகளை எடுத்து தைக்க கொடுப்ப தில் முனைப்பாக செயல்பட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை விற்பனை விறு விறுப்பாக நடந்தது. பண்டிகை காலம் நெருங்க நெருங்க ஆயத்த ஆடைகள் (ரெடிமெட்) வாங்க அனைத்து கடை களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    சாலையோர சிறு வியாபாரிகள் ஆயத்த ஆடைகள், பட்டாசுகள், மற்றும் சிறுவர்-சிறுமிகளை கவரும் பொருட்கள் போன்ற வற்றை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். அவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாகர் கோவில் மீனாட்சிபுரம், செம்மங்குடி ரோடு, கோட்டார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை களில் மக்கள் குடும்பத்து டன் வந்ததால், அங்கு போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது. இதற்கிடையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை வியா பாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திடீர்.. திடீரென பெய்யும் மழையால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர்.

    இருப்பினும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வர அங்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதனை சீரமைக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீ சார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளனர். சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதனால் மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சிரமமின்றி சென்று ஜவுளி மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல்ேவறு ரக புதிய பட்டாசுகளை வாங்குவதில் சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் குமரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை களை கட்டி காணப்பட்டது. இன்னும் 2 நாட்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் வியாபாரிகளும் போலீசாரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட, வெளியூர்க ளில் வேலை பார்ப்ப வர்கள் இன்று முதல் குமரி மாவட்டம் வரத் தொடங்கி விட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து வேலை பார்ப்பவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ்நிலையம், ரெயில் நிலையம் நோக்கி வருகின்றனர். வெளியூர் செல்வோர் மற்றும் வருவோர் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாலை , இரவு நேரங்கள் மட்டுமின்றி, காலை நேரத்திலும் ஏராளமானோர் பயணத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டினர்.

    Next Story
    ×