என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கோரிக்கை மனு - மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டுகோள்

- நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் மோட்டாரை இயக்க மாதம் ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது
- டேங்கு மற்றும் மோட்டார் ஒவ்வொன்றும் இயக்க சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி உள்ளது
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது.கலெக்டர் ஸ்ரீதர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க குமரி மாவட்ட கிளை தலைவர் செல்வன் தலைமையில் ஏராளமானோர், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கூடுதலாக இயக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் மோட்டாரை இயக்க மாதம் ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை ரூ.2 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் கூடுதல் மோட்டார் மற்றும் டேங்க் இயக்குவது கைவிட ப்படும். கூடுதலாக இயங்கும் டேங்கு மற்றும் மோட்டார் ஒவ்வொன்றும் இயக்க சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் பெட்ரோல் செலவு ஏற்படுகிறது.
எனவே அனைத்து பணியாளர்களுக்கும் அரசே இலவச எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். காலவரை ஊதியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். எங்களது சங்க நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் தலைமையில் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.
மற்ற மாவட்டங்களை போன்று அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி பணியா ளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் அவர்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலக வாசலில் சோதனை மேற்கொண்டனர். பொது மக்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.