search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
    X

    நாகர்கோவிலில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

    • உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
    • 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நாகர் கோவில் பால் பண்ணை சந்திப்பில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் முன்னிலை வகித்தார்.

    உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளரிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் விஜிலா சத்யானந்த், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி துணைமேயர் மேரி பிரின்சிலதா, மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் ஷேக்மீரான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் சென்னை யில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது. ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத் திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகளும் போதுமான அளவு இருப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. நாம் கொேரானா பரவலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். 2021-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை ஒற்றை இலக்க எண்ணில் தான் வளர்ச்சி பெற்றிருந்தது. தற்போது அந்த இலக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு 26.6 சதவீத இலக்கை எட்டி உள்ளது.

    கருணாநிதி ஆட்சியில் ஐ.டி. பிரிவில் புரட்சி இருந்து வந்த நிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியுள்ளார். தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் இருக்க வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் நடந்த தோள்சீலை போராட்ட மாநாட்டில் கலந்து கொண்டார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். சாதியை பிளவுபடுத்தி சிலர் கழுத்தை அறுக்க நினைக்கிறார்கள். இதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு கொள்கையும் கோட்பாடும் கிடையாது. ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பார்த்து ஊரே சிரிக்கிறது. முட்டாள் தனமான இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு அப்பில் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதிக் கான உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி தென்பகராமன் புதூரில் நடந்தது.கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளர் நம்பி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை நடத்தினார். குளச்சல் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அருண் அந்த தொகு திக்குட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை நடத்தினார்.

    Next Story
    ×