என் மலர்
உள்ளூர் செய்திகள்

தே.மு.தி.க. தொடக்க விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு
- கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
- அரசு தொடக்கப்பள்ளியிலும் இனிப்பு வழங்கப்பட்டது.
நாகர்கோவில்:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 18-வது ஆண்டு தொடக்க விழா நாகர்கோவில் மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் இந்தியன்சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. அவைத்தலைவர்ராஜன், வக்கீல் பொன் செல்வராஜன், பகுதி பொறுப்பாளர்கள் கோணம் ராஜன், நாஞ்சில் வெங்கட், ராஜாமணி, ராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவானந்த், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வைகுண்டராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகர்கோவில் நாகராஜாகோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. எள்ளுவிளை அரசு தொடக்கப்பள்ளியிலும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஆசாரிபள்ளம் ஜிஷா முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசுவாமி, புத்தேரி ஊராட்சி செயலாளர்அய்யப்பன், மேலசங்கரன்குழி ஊராட்சி செயலாளர் செந்தில், எள்ளுவிளை ஊராட்சி செயலாளர் விக்னேஷ், மேலசங்கரன்குழி செல்லபெருமாள், கணபதி, மாவட்ட மகளிரணி ஜெயா, சாந்தி, அபூர்வகனி, லட்சுமி, செல்வி, மாவட்ட மாணவரணி அனீஷ், வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுதன், மணி, கணபதிபுரம் ரஜினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






