என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- கரைப்பதற்கு கடும் கட்டுப்பாடு
- நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டு வரு கிறார்கள். பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள விநாய கர் சிலைகள் குமரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நாளை மறுநாள் (22-ந் தேதி) சிவ சேனா சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது.
23-ந் தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலை கள், நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை பீச்சில் கரைக்கப்படு கிறது. மணவாளகுறிச்சி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மணவாளக்குறிச்சி கடலில் கரைக்கப்படுகிறது.
24-ந் தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகள் 11 இடங்களில் இருந்து ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுசீந்திரத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. தோவா ளையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சிலைகள், பள்ளி கொண்டான் அணையிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.
தக்கலையில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் மண்டைக் காட்டிலும், குலசேகரத்தில் இருந்து கொண்டு செல்லப் படும் சிலைகள் திற்பரப்பு அருவியிலும், கருங்கலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலைகள் தேங்காய் பட்டனம் கடலி லும் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போல் மேலும் ஒரு சில இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. மினிலாரி போன்ற 4 சக்கர வாகனங்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.
விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்ப டுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறி விக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
சிலை கரைப்புக்கான ஊர்வலம் காவல் துறை யினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப் பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்