என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடை திறக்கும் நேரம் 1 மணி நேரம் நீட்டிப்பு
- 17-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
- இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கேரளா வில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலா னவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரி சலை தவிர்க்க கோவி லின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.
இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.