search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்
    X

    குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

    • நாகர்கோவிலில் நாளை நடக்கிறது
    • கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம் அறிக்கை

    நாகர்கோவில்

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க சார்பில் தொண்டர்களின் எழுச்சியுடன் மாபெரும் வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு சிறக்க ஆலோசனைகள் வழங்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமை கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத் திற்கு நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை (2-ந்தேதி) நாகர்கோவிலில் நடக்கிறது.

    காலை 10 மணிக்கு நாகர்கோவில் வாட்டர் டேங் ரோட்டில் உள்ள ஒய்.ஆர். மகாலில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்குகிறார். குமரி கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் டாக்டர் ராஜாராம் வரவேற்கிறார்.

    எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சிவ செல்வராஜன், குமரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சிவகுற்றாலம், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட்தாஸ், மாவட்ட இணை செயலா ளர்கள் மேரிகமலபாய், சாந்தினி பகவதியப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் சலாம், பார்வதி, அல்போன்சாள், மாவட்ட பொருளாளர்கள் திலக், சில்வெஸ்டர், நாகர்கோவில் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஜெபின்விசு, நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியம், சேகர், அனிலாசுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டத்தில் அவைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ் மகன் உசேன், நான் (தளவாய்சுந்தரம்) மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, பச்சைமால், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

    முடிவில் மாமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீலிஜா நன்றி கூறுகிறார்.

    கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள், மாநகர வார்டு நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×