search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி  குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா
    X

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா

    • மாங்கனி திருவிழா13-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சிவபெருமானால் புனிதவதி என்று அழைக்கப் பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன் மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக் காலில் தனி சன்னதி உண்டு. அதேபோல கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலிலும் காரைக்கால் அம்மையருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி நாளில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் மாங்கனி அளித்ததை நினைவூட்டும் விதமாக மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதேபோல இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா ஆனி மாத பவுர்ணமி யான வருகிற 13-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 5.30 மணிக்கு மூலவரான 5½ அடி உயரமுள்ள குகநாதீஸ்வ ரருக்கு சிறப்புஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் 6.45 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு மாங்கனி திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி சிவபெரு மான் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றிபவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது திரளான பக்தர்கள்கூடை கூடையாக மாம்பழங்களை காரைக்கால் அம்மையாருக்கு படைத்து வழிபடுகின்றனர். அதன் பிறகு மாங்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற் கான ஏற்பாடுகளை கன்னி யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேர வையினர் செய்து வருகிறார் கள்.

    Next Story
    ×