என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் இன்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
    X

    தக்கலையில் இன்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

    • பிளஸ்-1 பயிலும் 8,193 மாணவர்கள், 8,559 மாணவிகள் என மொத்தம் 15,752 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-1 பயின்ற மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா இன்று (வியாழக்கிழமை) தக்கலை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

    2021-22-ம் கல்வி யாண்டில் குமரி மாவட்ட த்தில் உள்ள 140 அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் 8,193 மாணவர்கள், 8,559 மாணவிகள் என மொத்தம் 15,752 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது என விழாவில் தெரிவிக்க ப்பட்டது.

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அலு வலர் சிவபிரியா, பத்ம நாபபுரம் சப்-கலெக்டர்அலர் மேல்மங்கை, பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர்அருள் சோபன், கவுன்சிலர் ஜெயசுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் தக்கலை மாவட்டக்கல்வி அலுவலர் எம்பெருமாள் அவர்கள் நன்றி கூறினார்.

    Next Story
    ×