என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் பரிதாப சாவு - தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
- நாகர்கோவிலில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் ஒன்றில் ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மீண்டும் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார்கள்.
- பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாகர்கோவில் :
இரணியல், சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அருள் ஜாஸ்மின் (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அருள் ஜாஸ்மின் மீண்டும் கர்ப்பமானார்.இதையடுத்து அவர் திங்கள் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.
தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அருள் ஜாஸ்மின் பரிசோத னைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருள் ஜாஸ்மினை ஸ்கேன் எடுத்து வருமாறு கூறினார்கள்.
உடனே அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டர் ஒன்றில் ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மீண்டும் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார்கள்.
உடனே அவரது உறவி னர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அருள் ஜாஸ்மினை அழைத்து வந்தனர். அங்கிருந்து நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அருள் ஜாஸ்மினை சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை அசைவின்றி இருப்பதால் உடனே அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நேற்று இரவு அருள் ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்தனர்.அப்போது குழந்தை இறந்திருந்தது.
மேலும் அருள் ஜாஸ்மினின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதுகுறித்து டாக்டர்கள் அருள் ஜாஸ்மின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தனர்.குழந்தை இறந்த தகவலை கேட்டு ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த உறவினர்கள், அருள் ஜாஸ்மினும் கவலைக்கிட மாக இருப்பதாக கூறியதால் கவலை அடைந்தனர். இந்த நிலையில் அருள் ஜாஸ்மின் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அருள் ஜாஸ்மின் மற்றும் அவரது குழந்தை சாவிற்கு திங்கள் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டரே காரணம் என்று அருள் ஜாஸ்மினின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பிரசவத்தில் தாய்-குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்