search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
    X

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

    • 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
    • காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 7 கோவில்களில் நேற்று இரவு சொக்கப்பனை கொளு த்தப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோ வில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்க ளில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    திருக்கார்த்திகையை யொட்டி அந்தந்த கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்துவிட்டார். அதன்பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விழுந்தது. அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளிசென்று தங்களது வீடுகளிலும். விளைநிலங்களிலும். தொழில்நிறுவனங்களிலும் வைத்தனர். இவ்வாறாக இந்த சொக்கப்பனையில் எரிந்த சாம்பலை வைப்பதால் அந்த இடத்தில் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். இந்த சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சியில் ஏராள மான பக்தர்கள் பங்கே ற்றனர். சொக்க ப்பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். பறக்கை அருகே உள்ள புல்லுவிளை பெருமாள் சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா வினை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளு த்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஊர் தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர், முன்னாள் ஊர் செயலாளர் கனகராஜ் மற்றும் ஊர் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பகுதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற்றப்பட்டது. முன்னதாக மருந்துவாழ் மலையில் உள்ள பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

    மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பபட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம்வரை தெரிந்தது. 3 நாட்கள் இரவு-பகலாக தொடர்ந்து இந்த மகா தீபம் எரிந்து கொண்டே இருக்கும். மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபிறகு வீடுகளில் உள்ள வாசல் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடினார்கள். வீடுகள் தோறும் கொழு க்கட்டை, அப்பம், திரளி, போன்றவைகளை தயார் செய்து இறைவனுக்கு படைத்து வழிபட்டு பின்னர் உண்டு மகிழ்ந்தா ர்கள். கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களி லும் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிறுவர்கள் இரவு நேர ங்களில் சுக்குநாரி புல், டயர், தீப்பந்தங்கள் போன்ற வைகளை கொளுத்தி விளையாடினார்கள்.

    Next Story
    ×