search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்
    X

    நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • கண்காணிப்பு காமிரா சரியாக இருந்திருந்தால் குற்றவாளிகளை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும்

    நாகர்கோவில், மே.10-

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாலை நேரங்களில் பஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலைகளிலும், திருவிழாக்களிலும் பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் செயலிழந்து இருக்கின்றன. பல மாதங்களாக அண்ணா பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் கடந்த மாதமும், இந்த மாதமும் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க போலீசார் திணறுகிறார்கள். கண்காணிப்பு காமிரா சரியாக இருந்திருந்தால் குற்றவாளிகளை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும். அவை சரியாக செயல்படாததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். மக்கள் வெளியே நடமாடுவதற்கே பயப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் போலீசார் விழிப்புடன் செயல்பட்டு தனிப்படை அமைத்து பஸ் நிலையங்களிலும் பொது மக்கள் அதிகம் நடமாடுகின்ற சாலைகளிலும், திருவிழாக்கள் மற்றும் வியாபாரம் நடைபெறுகின்ற இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். நகை பறித்து செல்பவர்கள் அதிகமாக வெளி மாவட்டங்களை சார்ந்தவர்கள் என கருதபடுகின்றது. எனவே சந்தேகத்துக்கு இடமாக யாராவது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுற்றிதிரிந்தால் அவர்களை விசாரித்து அனுப்ப வேண்டும். ஆகவே அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், இதுவரையிலும் திருடப்பட்ட நகைகளை உடனடியாக கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×