என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கொல்லஞ்சி, மூவோட்டுகோணம் பகுதிகளில் நாளை மின் தடை கொல்லஞ்சி, மூவோட்டுகோணம் பகுதிகளில் நாளை மின் தடை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/26/1921786-7.webp)
கொல்லஞ்சி, மூவோட்டுகோணம் பகுதிகளில் நாளை மின் தடை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை
- பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி :
குழித்துறை உப கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, அருமனை, களியக்காவிளை, புத்தன்சந்தை, கண்ணுமாமூடு, களியல் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மார்த்தாண்டம் பிரிவுக்குட்பட்ட கொல்லஞ்சி, மாம்பள்ளித்தோட்டம், விரிகோடு மற்றும் மாமூட்டுக்கடை, குழித்துறை பிரிவுக்குட்பட்ட நெடியப்பனவளை, பாறைகுளம், ஆசாரிகுடிவிளை, குலகுழிகுளம் மற்றும் இளம்பிலாந்தோட்டம், அருமனை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சாலுமூடு, தாணிமூடு, ஜெயந்தி காலனி மற்றும் முக்கூட்டுகல், களியக்காவிளை பிரிவுக்குட்பட்ட சமுதாயப்பற்று, மலையடி, மலைகோயில் மற்றும் மூவோட்டுகோணம், புத்தன்சந்தை பிரிவுக்குட்பட்ட தெற்றிகுழி, மேக்கேதட்டுவிளை, மணலுக்காலை மற்றும் அம்பேற்றின்காலை, கண்ணுமாமூடு பிரிவுக்குட்பட்ட மேழக்கோடு, வெட்டுக்குழி மற்றும் குருவிக்குந்நு, களியல் பிரிவுக்குட்பட்ட ஆலஞ்சோலை, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி மற்றும் அணைமுகம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மின் தடை நாட்களில் பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.