search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிப்பு :  மேயர் மகேஷ்
    X

    கிருஷ்ணன்கோவில் சன்னதி தெரு சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    நாகர்கோவில் பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிப்பு : மேயர் மகேஷ்

    • நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு
    • நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் தெரு, பார்வதிபுரம், நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வீடுகளில் இருந்து கழிவு நீர் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று மேயர் வலியுறுத்தினார். மேலும், மோசமான சாலைகள், தெருக்கள் சீரமைக்க தேவையான மதிப்பீடுகள் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் ரூ.11 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில்:-

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தூய்மைப்பணி மேற்கொண்டு வருகிறோம்.வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 2-ந்தேதி நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு குமரி மாவட்டம் வருகிறார் .அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சியில் மேற் கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி நிதி கேட்கப்படும்.குடிநீர் பிரச்சனை உட்பட அடிப்படை பிரச்சி னைகளை தீர்க்கவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    நகர் நல அலுவலர் ராம்குமார், மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிக் , ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஷேக் மீரான், மாநகர துணை செயலாளர் வேல் முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன், வட்ட செய லாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×