search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை-சிற்றாறு அணைகளில் மீண்டும் உபரிநீர் திறப்பு
    X

    தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை-சிற்றாறு அணைகளில் மீண்டும் உபரிநீர் திறப்பு

    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    • 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. பூதப்பாண்டி, சிவலோகம், கன்னிமார், தக்கலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு என அனைத்து பகுதிகளி லும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.15 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 774 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் மதகுகள் வழியாக 503 கன அடி தண்ணீரும், உபரிநீராக 107 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 73.21 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 707 கன அடி தண்ணீர் விநாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணைக்கு 190 கன அடி நீர்வரத்து உள்ளதால் மதகுகள் வழியாக 100 கன அடியும், உபரிநீராக 129 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன.

    இதனால் இந்த அணை களுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்ப டுகிறது. அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாறு, பழையாறு, தாமிரபரணி, வள்ளியாறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. எனவே அங்கு கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 15.4, பெருஞ்சாணி 22, சிற்றார் 1-15.8, சிற்றார் 2-17.8, களியல் 12.2, கொட்டாரம் 26.4, குழித்துறை 10, மயிலாடி 26.2, புத்தன அணை 17.8, தக்கலை 23.2, பாலமோர் 15.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 14.4, அடையாமடை 8, முள்ளங்கினாவிளை 29, ஆணைக்கிடங்கு 17.6, முக்கடல் 15.6, பூதப்பாண்டி 10.2, நாகர்கோவில் 23.4, ஆரல்வாய்மொழி 16.2.

    Next Story
    ×