search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 25,26-ந் தேதிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்
    X

    வருகிற 25,26-ந் தேதிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவு ரைப்படி 01-01-2024 ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திரு த்தம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்ட ரால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்கவும், பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக டிசம்பர் 9-ந் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்கள் 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 வழங்கலாம்.

    மேலும் தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வருகிற 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தினங்களில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பான சிறப்பு முகாம்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×