search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்

    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதல்
    • காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முன் ஏற்பாடு

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு சமீபகாலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சுகாதாரத்துறை அதி காரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். குமரி மாவட்டத்தி லும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முன் ஏற்பா டுகள் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.குமரி மாவட்டத்திலும் இன்று அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த மருத்துவ முகாமில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். ராஜாக்க மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜக்கமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, ராஜாக்க மங்கலம் அரசு பள்ளி, புதூர் சுண்டப்பற்றிவிளை அரசு பள்ளிகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ குழுவினர் கா ய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர்.

    பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்புடன் யாராவது மாணவர்கள் வந்துள்ளா ர்களா ? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களிடம் அவர்களது குடும்பத்தினர் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் அகஸ்தீஸ்வரம் தென்தாமரைகுளம் கொட்டாரம் பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது.

    முன்சிறை ஒன்றியத்தில் காப்புக்காடு பள்ளியிலும், திருவட்டார் ஒன்றியத்தில் ஏற்ற கோடு பள்ளிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் குழுவினர் மாணவ , மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஆனால் சமீ பகாலமாக ஆஸ்பத்திரிக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வந்து செல்கிறார்கள்.

    இன்றும் புற நோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. காய்ச்சல் பாதிப்பை பொருத்தமட்டில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×