என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு - நாகராஜா கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் - பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
- நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்
- குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள்
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவில் நாக தோஷ பரிகார தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். திருமணங்கள் கைகூடவும், தோஷங்கள் நீங்கவும், நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட் டம் மட்டுமின்றி வெளி யூர்களில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் வந்து தரிச னம் செய்து செல்கிறார்கள்.
குறிப்பாக ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாகர் சிலை களுக்கு பால் ஊற்றி வழிபடு வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்த தான் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த 2 மாதங்களாகவே ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு மாதம் 21-ந்தேதியும், 2-வது ஞாயிற்றுக் கிழமை 28-ந்தேதி, 3-வது ஞாயிற்றுக்கி ழமை செப்டம்பர் 4-ந் தேதியும், நான்காவது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 11-ந்தேதியும், வருகிறது. 4 ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணி கள் தற்போது தொடங்கப் பட்டு உள்ளது.
கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் ஒரு வழியாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மறு பாதை வழியாக வெளியே வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.தற்போது வெயில் அதிகமாக உள்ளது. மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. வெயில் மழையிலும் பொதுமக்கள் நின்று சாமி தரிசனம் செய்ய வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆவணி முதல் ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதையடுத்து அவர்க ளுக்கான அடிப்படை வசதி களை மேம்படுத்தவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 ஆவணி ஞாயிற் றுக்கிழமைகளில் பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டு உள்ளது.
மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பக்தர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்