search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் வருகிற 7-ந் தேதி தமிழ்நாடு நாள் விழா
    X

    நாகர்கோவிலில் வருகிற 7-ந் தேதி தமிழ்நாடு நாள் விழா

    • கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ஏற்பாடு.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சரால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி 'தமிழ்நாடு நாள் விழா' என கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கடிதத்தில் மாவட்ட அளவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க ஆணை யிடப்பட்டுள்ளது.

    போட்டியின் தலைப்புகளாக தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள். பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம். மொழிவாரி மாநிலம் உருவாக்கத் தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு. எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகியவை உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10,000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ,7000, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.5000 வழங்கப்படுகிறது. மேலும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 07-07-2022 அன்று நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. கட்டுரை போட்டி காலை 10 மணிக்கும், பேச்சுப்போட்டி பகல் 12 மணிக்கும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×