என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு காட்சி பொருளாக நிற்கும் டாரஸ் லாரிகள்
- அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
- 100-க்கணக்கான லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
நாகர்கோவில், ஜூலை.12-
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அ ளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் பல்வேறு நடவடிக்கை களை மேற் கொண்டு வருகிறார்கள்.
இருப்பினும் கனிமவ ளங்கள் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளுக்கும் கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. நாகர்கோவில் நகர பகுதியில் காலை நேரங்களில் டாரஸ் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புறவழிச்சாலை வழியாக கனிவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வழியாக லாரிகள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் காலை நேரங்களில் நாகர்கோவில் நகருக்குள் டாரஸ் லாரிகள் கனிம வளங்கள் கடத்திச் செல்வதாகவும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 16 டயர் லாரிகளை இயக்குவதால் ரோடுகள் சேதம் அடைவதாகவும் அதிக பாரங்கள் ஏற்றி வரும் வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்கலை சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.
அதிக பாரம் ஏற்றி வரும் டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன் ஒரு சில லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி உள்ளதா, அதிக பாரம் ஏற்றி வருகிறார்களா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களில் மட்டும் 100-க்கணக்கான லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
அதிக பாரம் ஏற்றி வந்ததாக பறிமுதல் செய்யப் பட்ட லாரிகள் தாலுகா அலுவலகங்களில் நிறுத்தப் படட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட லாரிகளை அந்தந்த போலீஸ் நிலையங்க ளில் நிறுத்தி வைத்துள்ளனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதிக பாரம் ஏற்றி வந்ததாக 9 லாரிகள் பறிமுதல் செய்யப்பது. அந்த லாரிகள் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் அனைத்தும் கோட்டார் போலீஸ் நிலை யத்தின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட லாரிகள் போக்குவரத்துக்கு இடை யூறாக உள்ளன.
லாரிகள் அனைத்தும் காட்சி பொருளாக நின்று கொண்டிருக்கிறது. நிறுத்தப் படட்ட லாரிகளின் சக்கரங்களில் இருந்து காற்றுகள் இறங்கி மோசமான நிலையில் காணப்படுகிறது. லாரிகள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துக்கள் நடக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக அந்த போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள லாரிகளை போலீசார் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்