என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அழகிய பூங்காவாக மாறிய தக்கலை போலீஸ் நிலையம்
- போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
- தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 77 ஆண்டுகள் போலீஸ் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டு மாடி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
அதே வேளையில் பழைய கட்டிடம் போக்குவரத்து போலீஸ் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. வளாகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் செடி, கொடிகள் அதிகமாக வளர தொடங்கியது. இதை அவ்வப்போது போலீசார் வெட்டி அகற்றி வளாகத்தை சுத்தம் செய்து வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனை வழங்கினார்.
அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் இணைந்து முதன் முதலாக தக்கலை பஸ் நிலையத்தில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் இருந்த புற காவல் அறையை அகற்றி புதிய அறையை கட்ட ஏற்பாடு செய்தனர்.
மேலும் தக்கலை போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்குகள் சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஓரமாக அடுக்கி விட்டனர்.தொடர்ந்து வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் பயமின்றி அமர்ந்து செல்ல அந்தப் பகுதியில் இன்டர்லாக் போடப்பட்டது.போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள சுவரோரம் முதன் முதலாக பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து சுமார் 30 மீட்டர் நீளம் 1½ மீட்டர் அகலம் அளவில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.
இந்த பூந்தோட்டத்தில் மக்களை கவரும் விதத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. புல் மற்றும் பூந்தோட்டத்தை அமைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஆஷா ஜெபகர், அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உட்பட காவல்துறையை சேர்ந்த அனைவரையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.