என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொழிக்கரையில் ரூ.9 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவு பணியை பார்வையிட்ட தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
- கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது
- 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலம் ஒன்றியம், பொழிக்கரையில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தூண்டில் வளைவுகள் அமைப்பதற்காக அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு 190 மீட்டருக்கு தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.
கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மீனவர்களின் நலன் காக்கின்ற வகையில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.
மேலும் தற்போது 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக வந்துள்ளேன். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மீனவர்களுக்கான திட்டங்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றப்பட்டது. இந்த தூண்டில் வளைவு இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக அமையும். இத்திட்டத்தை இப்பகுதி மக்களுக்கு தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மீனவ மக்களின் சார்பிலும், நன்றியினை தெரிவித்து க்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், பொழிக்கரை பங்குத்தந்தை ரெ ஞ்சித்குமார், கேசவ ன்புத்தன்துறை ஊராட்சி மன்ற தலைவர் கெபின்ஷா ஆரோக், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.