search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரூப்-1 தேர்வு மையத்திற்கு காலையிலேயே வந்த பெண்கள்

    • நாகரில் 22 மையங்களில் நடந்தது
    • பலத்த சோதனைக்கு பிறகு அனுமதி

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 பணியிடங்கள் காலி யாக உள்ளது.

    இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு 7329 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நாகர்கோவிலில் 22 மையங்களில் இன்று தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு காலை யிலேயே தேர்வு எழுதுப வர்கள் வந்திருந்தனர். இளம்பெண்கள், வாலி பர்கள் பலரும் தேர்வு மையத்திற்கு வந்தனர். கைக் குழந்தைகளுடனும் பெண்கள் வந்தனர்.

    நாகர்கோவில் எஸ்.எல். பி. பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க பட்டனர்.காலை 8.30 மணி முதல் தேர்வு எழுத வந்தவர்களின் அனுமதி சீட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் தேர்வு எழுத வந்த இளம்பெண்கள் தங்களது உறவினர்களிடம் செல்போன்களை ஒப்படைத்து சென்றனர். சிலர் செல்போன் வைப்ப தற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் செல்போன்களை வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர்‌. கைக்கு ழந்தையுடன் வந்த பெண் கள் தங்களது குழந்தை களை கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்ப டைத்துவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். இளம்பெண்கள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களுடன் வந்த பெற்றோர் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    டதி பள்ளி, டி.வி.டி. பள்ளி, கோலி கிராஸ் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து வித்யாலயா பள்ளி, பயோனியர் கல்லூரி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி உள்பட அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிந்தது.

    தேர்வை கண்காணிக்க 2 பறக்கும் படைகள், 6 நடமாடும் குழுக்கள் மற்றும் 22 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் டதி பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×