search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி மணிமண்டப பணியை விரைவில் முடிக்க வேண்டும்
    X

    தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி மணிமண்டப பணியை விரைவில் முடிக்க வேண்டும்

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

    நாகர்கோவில், நவ.14-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.விற்குட் பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை விரைவாக அமைப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் நாகர் கோவிலில் நடைபெற்றது. அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன் னாள் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. விற்குட்பட்ட கன்னியா குமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி களில் பூத் வாரியாக பூத் கமிட்டியினை ஏற்கனவே கூறியபடி விரைவாக அமைத்து, பூத் கமிட்டி புத்த கத்தினை வருகிற 18-ந்தேதிக் குள் கட்சி தலைமைக்கு சமர்ப்பிப்பது, குமரி மாவட்ட பத்திரப்பதிவில் நிலத்திற்குரியவர்கள் 1 சென்ட் நிலத்தை கூட விற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், பொது மக்களை யும் திரட்டி கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது.

    தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணி களை விரைவில் முடிப்பதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பச்சைமால், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாணவரணி செயலாளர் மனோகரன், குமரி மாவட்ட இளைஞரணி, இளம்பெண் பாசறை செய லாளர் அக் ஷயாகண்ணன், பகுதி செயலா ளர்கள் ஜெயகோபால், ஜெபின் விசு, ஸ்ரீலிஜா, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெஸீம், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக் குமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜாராம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரபீக், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் பிரிவு செயலாளர் ஆறுமுகராஜா, நிர்வாகி பசலியான் நசரேத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பகுதி செயலாளர் முருகேஸ்வரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×