search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை சந்தையில் பூக்கள் விலை குறைவு
    X

    தோவாளை சந்தையில் பூக்கள் விலை குறைவு

    • விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • மலர் வளையம் பக்கத்தில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும்

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தை மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா, வேளச்சேரி மூலம் வெளிநாடுகளுக்கும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் பூக்களால் தினசரி வருவாய் பெற்று வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், ஆவரைகுளம் மாட நாடார் குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பிச்சிப்பூ வும், மதுரை, மானா மதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல், ராஜ பாளையம், சங்கரன் கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மனம் வீசும் மல்லிகை பூவும், சேலம், ராயக்கோட்டை, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர்ரோஸ் ஆகிய பூக்களும், தென்காசி, புளியங்குடி, அம்பாச முத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி, கொழுந்து, மரிக்கொழுந்து, தோவாளை, செண்பகரா மன்புதூர், தோப்பூர், மருங்கூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து அரளிப்பூ, சம்பங்கி, கோழிக் கொண்டை, அருகம்புல், தாமரை ஆகிய பூக்கள் பூச்சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிக்கும் என எண்ணிய விவசாயிகள், தற்போது விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஒரே ஒரு நாள் மட்டும் ஆயிரத்துக்கும், 1500-க்கும் விற்பனையான பூக்கள், புரட்டாசி மாதம் என்பதால் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற விசேஷ வீடு இல்லாததால் பூக்கள் விலை மிகவும் குறைந்துவிட்டது.

    குறிப்பாக ஒரு கிலோ பிச்சி ரூ.350-க்கும், மல்லிகைப்பூ ரூ.500-க்கும், அரளிப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், வாடாமல்லி ரூ.30-க்கும், சிவப்பு கிரேந்தி ரூ.20-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், முல்லை ரூ.300-க்கும், துளசி ரூ.40-க்கும், கொழுந்து ரூ.90-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும் மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது.

    பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் பறிப்பு செலவு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பூக்கள் அதிகமாக வருகிறது. ஆனால் விலை இல்லை. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    இதுகுறித்து பூ வியாபாரி கேசவ முருகன் கூறுகையில், ஓணத்தை நம்பி விவசாயிகள் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்தார்கள். விற்பனையும் இல்லை, விலையும் இல்லை. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் விலைகள் இல்லை. இனி ஆயுத பூஜை வந்தால் தான் பூக்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    மேலும் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தந்தால் பூக்களை பாதுகாக்க முடியும் இல்லையென்றால் விற்பனையாகாத பூக்களை மலைபோல குவித்து குப்பை தொட்டிக்கு தான் அனுப்ப முடியும். எனவே அரசு மலர் வணிக வளாகத்தில் அல்லது மலர் வளையம் பக்கத்தில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும் என கூறினார்.

    Next Story
    ×