search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் மின் ஊழியர் வீட்டில் திருட்டு
    X

    ஆரல்வாய்மொழியில் மின் ஊழியர் வீட்டில் திருட்டு

    • நகையை விட்டு விட்டு பணத்தை மட்டும் எடுத்துச் சென்ற கொள்ளையன்
    • தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள பெருமாள்புரம் கன்னி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 56). இவர் செண்பகராமன்புதூர் துணை மின்நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனும் மகளும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிற்கு பால கிருஷ்ணன் மனைவி உமா வுடன் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் உள்பக்க கதவு பூட்டு உடைந்து கிடப்பதை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்கள் பார்த்து உள்ளனர். இது பற்றி அவர்கள் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த யாரோ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதற்கிடையில் கொள்ளை சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பாலகிருஷ்ணன் உடனடி யாக ஊர் திரும்பினார். வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் மேசையில் இருந்த 25 ஆயிரம் ரூபாயில் ரூ.10 ஆயிரம் மட்டும் எடுத்துச் சென்றிருப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார்.

    மேலும் பணத்தின் அருகில் இருந்த தங்கநகைகளை கொள்ளையன் எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நூதன முறையில் நடந்த இந்த திருட்டு அந்தப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே பகுதியில் ஏற்கனவே பைக் திருட்டு உள்பட பல சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது மீண்டும் மின்வாரிய அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டவுன் டி.எஸ்.பி. மற்றும் அதிகா ரிகள் வந்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்தில் பாதி மற்றும் நகையை விட்டு விட்டு கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×