என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேங்காப்பட்டணம் துறைமுகம் ரூ.248 கோடியில் சீரமைக்கப்படும்
- அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
- தேங்காய் பட்டணம் மீன்பிடி துறை முக புனரமைப்பு திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படும்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்லைன் குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரிவின் கீழ் வருகிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நிச்சயம் நல்ல முடிவு வரும்.
குமரி மாவட்டத்தில் ஐ.டி பார்க் அமைக்க கோணத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கருத்துரு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவை, சென்னை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் அவை திறக்கப்படும்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருக்கும்போது கொண்டு வரப்பட்ட திட்டமாகும். 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அந்த பணிகள் முடிக்கப்பட்டது.
பணிகள் நடந்து வரும் போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. துறைமுகத்தின் முகப்பு தோற்றத்தில் ஏற்படும் மணல் குவியலின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது.
கனிமொழி எம்.பி. துறைமுகத்தை நேரில் பார்வையிட்டு உறுதி அளித்தார். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். மீன் துறை அமைச்சர் நேரில் வந்து ஆய்வு நடத்தினார். நானும் கலெக்டரும் 3, 4 முறை கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்துள்ளோம்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளூர் மீனவ மக்களுடன் ஆலோசிக்க ப்பட்டது. நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக ஐ.ஐ.டி. உள்ளிட்ட துறை நிபுணர்கள் மற்றும் மீனவ மக்களின் கருத்துக்களும் கேட்டனர்.
இதையடுத்து ரூ.248 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதி உதவிக்கான அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தற்போது ஏற்றுக் கொண்டு உள்ளனர். விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு துறைமுக பணிகள் தொடங்கும்.
தற்போது அற்ப காரணங்களுக்காக போராட்டங்களை அறிவித்துள்ளனர்.நிச்சயம் திட்டமிட்டபடி பணிகள் நடைபெறும். மோசமான கடல் சூழலில் மீனவர்கள் அந்த பகுதியில் மீன் பிடிப்பது தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி அந்த பகுதியில் மீன் பிடிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகிறோம்.
தி.மு.க. அரசு முனைப்போடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பட்டா வழங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறை முக புனரமைப்பு திட்ட மும் முழுமையாக நிறைவேற்றப்படும்.இந்த நேரத்தில் போராட்டம் அறிவித்துள்ளது என்பது ஒரு நாடகமாகவே பார்க்க ப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்