search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூவாற்றுமுகம் அருகே இயங்கி வந்த மோசடி நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்
    X

    மூவாற்றுமுகம் அருகே இயங்கி வந்த மோசடி நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

    • பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு
    • மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலைய செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் மூவாற்று முகம் அரங்கன் விளையில் இயங்கி வந்த மூவாற்றுமுகம் சிவ சாஸ்தா சிட்பண்ட் (பி) லிமிடெட் என்ற நிதி நிறுவ னத்தின் மீது, நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டி இருப்பதால், இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்து இது வரையிலும் நாகர்கோவில் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்காதவர்கள் உடனடியாக நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து அசல் ஆவணங்களுடன் புகார் மனு கொடுக்கும்படி கேட்டடுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×