என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்
    X

    நாகர்கோவிலில் இன்று கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்

    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா, செயலாளர் பொன் பாக்கிய தீபா, டயானா பிரபாராணி, லூயிஸ் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

    Next Story
    ×