search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில்-காவல்கிணறு 4 வழிச் சாலையில்  24-ந் தேதி முதல் டோல்கேட் செயல்படும்
    X

    நாகர்கோவில்-காவல்கிணறு 4 வழிச் சாலையில் 24-ந் தேதி முதல் டோல்கேட் செயல்படும்

    • வாகனங்கள் சென்று வர கட்டணம் நிர்ணயம்
    • இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 4 வழிச் சாலை திட்ட பணிக்காக காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில்அப்டா மார்க்கெட் வரை 14 கி.மீ. தூரம், அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16 கி.மீட்டர் தூரம், அப்டா மார்க்கெட் முதல் முருகன்குன்றம் வரையில் 12 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டு 2016 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரையிலான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் முடிய மேலும் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    இதற்கிடையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த டோல்கேட் வருகிற 24-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்க பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.

    முன்பு 47 பி என இருந்த நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை, திருத்தப்பட்டு இனி தேசிய நெடுஞ்சாலை எண் 944 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×