search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவியில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்
    X

    திற்பரப்பு அருவியில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வர கண்ணாடி இழை பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தமிழக சுற்றுலா துறை மேம்பாட்டு கழகம் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து புணரமைப்பு மேம்பாட்டு பணிகள் செய்வதற்காக ரூ.4.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா திற்பரப்பு அருவி அருகில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட பல சிறப்பு அம்சங்களை கொண்ட மாவட்டமாகும். திருவட்டார் தாலுகா இயற்கை வளத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றுலாவிற்கும் பெயர் பெற்றது. தெற்கு ஆசியாவின் மிக உயரமான மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி மாவட்டத்தில் தான் அமைந் துள்ளது.

    வரலாற்று சிறப்புமிக்க உதயகிரி கோட்டையும் மிக அருகிலேயே அமைந்துள்ளது. அதனால் தான் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும் இணைந்து மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்ப டுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக 2021-2022 மாநில அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் சிற்றாறு-2 அணை பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங் கப்படவுள்ளது.

    மேலும் திருவள்ளுவர் சிலை ரூ.11.98 கோடியில் திருவள்ளுவர் சிலையில் லேசர் லைட் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட உள்ளது. முட்டம் கடற்கரை பகுதியில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் அடிக் கல் நாட்டப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறைக்கும் அதிக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கும்,விவேகானந்தர் சிலைக்கும் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வர கண்ணாடி இழை பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பேரூராட்சி களின் உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், சுற்றுலாஅலுவலர் சதீஷ்குமார், சுற்றுலா வளர்ச்சி கழக செயற் பொறியாளர் சீனிவாசன், திருவட்டார் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, அரசு வழக்கறிஞர் ஜாண்சன், திற்பரப்பு தி.மு.க. பேரூர் செயலாளர் ஜான்எபனேசர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×