search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பணிக்காக கோட்டார்-சவேரியார் ஆலய சாலையில் போக்குவரத்து மாற்றம் அமல் - செட்டிக்குளம், வேப்பமூட்டில் போக்குவரத்து நெருக்கடி
    X

    பாதாள சாக்கடை பணிக்காக கோட்டார்-சவேரியார் ஆலய சாலையில் போக்குவரத்து மாற்றம் அமல் - செட்டிக்குளம், வேப்பமூட்டில் போக்குவரத்து நெருக்கடி

    • பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்
    • வாகன ஓட்டிகள் கோட்டார் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகள் வழியாக சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டு வருகிறது.

    தற்பொழுது பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணி களை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது பிரதான சாலைகளில் பாதாள சாக்கடைக்கான பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலமாக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதையடுத்து இந்த சாலையில் இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.

    கோட்டார் போலீஸ் நிலையம் பகுதியில் சாலை கள் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு இருந்தது. இதே போல் சவேரியார் ஆலய பகுதியிலும் சாலைகள் தடுப்பு வேலிகளால் மூடப் பட்டு பணிகள் நடை பெற்றது. இருப்பினும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையின் வழியாக நுழைந்து சென்றனர்.வாகன ஓட்டிகள் கோட் டார் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகள் வழி யாக சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்க டியில் சிக்கி தவித்தனர்.

    வடசேரி பஸ் நிலை யத்தில் இருந்து கன்னியா குமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக கோட்டார் சென்றது.

    இதேபோல் கன்னியா குமரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் பீச் ரோடு சந்திப்பிலிருந்து ராமன்புதூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டது.மேலும் கலெக்டர் அலு வலக சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு செல் லும் வாகனங்கள் அனைத்தும் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து சவேரி யார் ஆலய சந்திப்பு வழி யாக இயக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    Next Story
    ×