search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டீ கேட்டு பெண் போலீசிடம் தகராறு செய்து ஆபாசமாக பேசிய வீடியோ வைரல்
    X

    டீ கேட்டு பெண் போலீசிடம் தகராறு செய்து ஆபாசமாக பேசிய வீடியோ வைரல்

    • பெண் போலீசிடம் அவதூறு பேசியதாக நாகர்கோவில் கைதி மீது வழக்கு
    • 2020-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதானவர்

    நாகர்கோவில் :

    சமூகவலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ அவ்வப்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.

    கடந்த 2 தினங்களாக தலையில் கட்டுடன் போலீஸ் வேனில் இருக்கும் கைதி நான் யார் தெரியுமா?... என்ன செய்வீர்கள்?... நான் ஒடுகிறேன் சுடு...சுடு... என கூறுவதோடு போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இது பற்றி விசாரித்த போது, ரகளையில் ஈடுபட்டவர் குமரி மாவட்ட கைதி என தெரியவந்தது.

    அவரது பெயர் தனேஷ் (வயது 25). குமரி மாவட்டம் இரணியலை அடுத்த நெய்யூர், சாக்கியான் கோடு பகுதியைச் சேர்ந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அங்கு சிறை சுவரில் மோதி தலையில் காயம் அடைந்த அவரை, ஆயுதப்படை போலீசார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சிகிச்சைக்கு செல்லும் வழியில் தனேஷ் திடீரென 'டீ' வேண்டும் என கேட்டு உள்ளார். கைதியை அழைத்துச் செல்லும் போது வேறு எங்கும் வாகனத்தை நிறுத்த முடியாது என கூறிய போலீசார், ஆஸ்பத்தி ரிக்குச் சென்றதும் டீ வாங்கித்தருவதாக கூறி உள்ளனர்.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த தனேஷ், டீ கேட்டு தகராறு செய்ததோடு ஆபாச வார்த்தைகளையும் உபயோகித்துள்ளார். மேலும் தனது சட்டையை கழற்றிய அவர், நான் ஒடுகிறேன். சுடு... சுடு.. என போலீசாரிடம் கூறுகிறார். அவரை போலீசார் சமரசம் செய்கின்றனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கைதி தனேஷ், அடிக்கடி இது போல போலீசாரிடம் வாக்குவாதம் செய்வார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த, ஆயுதப்படை பெண் போலீஸ் அஞ்சு (20) மற்றும் போலீசார் அழைத்துச் சென்று உள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு திரும்பும் போது, தனேஷ் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டு உள்ளார்.இதுகுறித்து கோட்டாறு போலீசில், பெண் போலீஸ் அஞ்சு புகார் கொடுத்துள்ளார்.

    அதில், தனேஷ் ஆபாச மாக பேசியதோடு, பணி செய்யவிடாமல் தடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி தனேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    Next Story
    ×