search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்ரூத் திட்டம் முடிவடையும் போது நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் - மேயர் மகேஷ் பேட்டி
    X

    அம்ரூத் திட்டம் முடிவடையும் போது நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் - மேயர் மகேஷ் பேட்டி

    • ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
    • 25-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க உத்தர விட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட ராணி தோட்டம் தடி டிப்போ 5-வது குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகருக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது முக்கடல் அணை மைனஸ் நிலைக்கு சென்று விட்டது.

    எனவே பேச்சிப்பாறை அல்லது பெருஞ்சாணி அணைகளில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    அதனை ஏற்ற அவர், மறுநாளே தண்ணீர் திறந்து விடுவதற்கான ஆணையை பிறப்பித்தார். 25-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை முக்கடல் அணைக்கு தண்ணீர் திறக்க உத்தர விட்டார். அதன்படி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    நாளை நான் (மேயர்) அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். முக்கடல் அணைக்கு தண்ணீர் வந்ததும், குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு அதன்பிறகு மக்களுக்கு விநியோகிக்கப்ப டும்.

    மேலும் ஆழ்துளை கிணறுகள் தூர்வாரப்பட் டுள்ளன. பழுதடைந்த மோட்டார்கள் சரி பார்க் கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்கும் அம்ரூத் திட்டம் மே 31-ந் தேதிக்குள் முடிவடையும் என எதிர் பார்க்கிறோம். இது தொடர்பாக பொதுப் பணித்துறை, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேசி உள்ளோம். அவர்களிடம் மே 31-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள் ளது. இந்தப் பணி முடிவ டைந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்ற நிலை ஏற்படும். ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்படும்.

    முக்கடலுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர் செல்வகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், வேல்முருகன், மாநகர சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், அகஸ்தீசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×