search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டத்தில் தாய்-மகளை கொன்றது ஏன்? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
    X

    முட்டத்தில் தாய்-மகளை கொன்றது ஏன்? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

    • மீன்பிடி தொழிலாளி அமல சுமன் கைது
    • நகைகளை அடகு வைத்து மோட்டர் சைக்கிள்கள் வாங்கினேன். மீதிப் பணத்தில் ஜாலியாக செலவு செய்தேன் என வாக்குமூலம்

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் குழந்தை தூய இயேசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாய ராஜ் இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48).

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜ் மற்றும் அவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகன் சென்னையில் படித்து வந்தார். இதனால் பவுலின் மேரிக்கு துணை யாக அவரது தாயார் தெரசம்மாள் வசித்து வந்தார்.

    கடந்த 6-ந்தேதி பவுலின்மேரி, தெரசம்மாள் இருவரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வெள்ளிசந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட னர். இதைத்தொடர்ந்து கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி அமல சுமன் (36) என்பவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி விட்டது. என்னை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். நான் தற்போது சூரப்பள்ளம் பகுதியில் வசித்து வருகிறேன். அவ்வப்போது கடியப்படடணத்திற்கு செல்வது வழக்கம்.பவுலின்மேரி ெதரு வழியாக நான் செல்வேன். சம்பவத்தன்று பவுலின்மேரி நடத்தி வரும் தையல் வகுப்பிற்கு சென்ற இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்தேன். இதை பவுலின்மேரி தட்டிக்கேட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி இரவு அவரது வீட்டிற்கு சென்றேன். அவரது வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்தேன். வீட்டில் இன்வர்ட்டர் பொருத்தப்பட்டு இருந்ததால் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து கதவை தட்டினேன். பவுலின்மேரி கதவைத் திறந்தார். உடனே நான் வீட்டுக்குள் சென்றேன். அப்போது அவர் கூச்சலிட்டார். உடனே நான் சுத்தியலால் பவுலின்மேரி தலையில் அடித்தேன். அவரது சத்தம் கேட்டு அவரது தாயார் அங்கு வந்தார். அவரையும் தாக்கினேன். இதில் இருவரும் இறந்துவிட்டனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த நகையை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டேன். பின்னர் நகைகளை அடகு வைத்து மோட்டர் சைக்கிள்கள் வாங்கினேன். மீதிப் பணத்தில் ஜாலியாக செலவு செய்தேன். போலீசார் நான் பயன்படுத்திய மங்கி குல்லாவை வைத்து துப்பு துலக்கினார்கள். நான் சிக்கி கொள்வேன் என நினைத்து தலைமறைவானேன்.ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட அமலசுமனிடம் இருந்து இரண்டு மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அமலசுமனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


    Next Story
    ×