search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை நீடிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை நீடிப்பு

    • பெருஞ்சாணியில் 14.8 மில்லி மீட்டர் பதிவு
    • சிற்றார்-1 அணை 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் குறைவான அளவு தண்ணீர் உள்ளது.

    மேலும் பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, இரணியல், அடையாமடை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 14.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு வெயில் வழக்கம்போல் சுட்டெரித்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 32.95 அடியாக உள்ளது. அணைக்கு 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 690 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 25.65 அடியாக உள்ளது. அணைக்கு 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.26 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 5.8, பெருச்சாணி 14.8, சிற்றார் 1 -10.2, சிற்றார் 2-8, நாகர்கோவில் 7.4, பூதப் பாண்டி 7.2, சுருளோடு 8.4, கன்னிமார் 3.4, பாலமோர் 11.2, மயிலாடி 3.6, கொட்டாரம் 5.2, இரணியல் 6.2, ஆணைக் கிடங்கு 8.4, குளச்சல் 8, குருந்தன்கோடு 4, முள்ளாங்கினாவிளை 6.2, புத்தன் அணை 12, திற்பரப்பு 8.2.

    Next Story
    ×