search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விவேகானந்தர் பாறையில் மகா தீபம்
    X

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விவேகானந்தர் பாறையில் மகா தீபம்

    • நாளை மறுநாள் ஏற்றப்படுகிறது
    • கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை மறுநாள் (26-ந்தேதி) மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி அங்கு ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அம்மனின் பாதத்திற்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் விடியவிடிய எரிந்து கொண்டே இருக்கும். கடற்கரையில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்த்து வணங்கி வழிபடுவார்கள்.

    Next Story
    ×