search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை கன்னியாகுமரி வருகை
    X

    முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஸ்ரீதர்ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

    பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை கன்னியாகுமரி வருகை

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்.பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும்செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. பாது காப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையை யொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவே கானந்தர் நினைவு மண்ட பம், விவேகானந்த கேந்திரா வில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங் களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஜனாதிபதி வருகையை யொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பயிற்சி உதவி கலெக்டர் குணால்யாதவ், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் ராஜ்குமார், கேந்திர நிர்வாக அதிகாரிஅனந்த ஸ்ரீபத்மநாபன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பூம்பு கார் கப்பல் போக்கு வரத்து கழக மேலாளர் செல்லப்பா, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ் குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப் பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகுகள்நிறுத்தி வைக்கப்படும்படகுதுறை க்குசெல்லும்சாலைஇரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்திலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    Next Story
    ×