என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
- பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்கி இருக்கிறார்.
- போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு சிறுமியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்கி இருக்கிறார்.
அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடி-தடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் விக்னேசுக்கு ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் விக்னேஷ் மாணவியை காதலிப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று மாணவியை விக்னேஷ் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவி வீட்டுக்கு வராததால் அவரை விக்னேஷ் கடத்திச்சென்றதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு மாணவி வீட்டுக்கு வந்தார். அப்போது விக்னேஷ் தன்னை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறி கதறினார். இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் தெரிவித்தனர். இதனையடுத்து கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக போலீசார் மாற்றினார்.
அதன்படி விக்னேஷ் மீது 2-வது முறையாக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2 முறை போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டும் போலீசாரிடம் சிக்காமல் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே விக்னேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே விக்னேசை தேடும்படி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விக்னேசை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட விக்னேஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்