search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூரில்  இலவச கண் சிகிச்சை முகாம்
    X

    முகாமில் கண்  பரிசோதனை செய்யப்பட்ட போது எடுத்தபடம்.

    கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

    • கீழப்பாவூர் குருசாமி கோவில் இளைஞர்அணி,குரு பாய்ஸ் நிதி உதவியுடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
    • இலவச கண் சிகிச்சை முகாமில் மொத்தம் 63 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப் பட்டது

    தென்காசி:

    கீழப்பாவூர் குருசாமி கோவில் திருமண மஹாலில் 57-வது இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    கீழப்பாவூர் குருசாமி கோவில் இளைஞர்அணி,குரு பாய்ஸ் நிதி உதவியுடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழுவின் நிறுவனருமான கே.ஆர்.பி. இளங்கோ தலைமை தாங்கினார். நிதி உதவி செய்த காந்தி, சுடலை பூபதி,பால்ராஜ்,அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் தான மாவட்டத் தலைவர் திருமலை கொழுந்து வரவேற்புரை ஆற்றினார்.

    உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தொகுப்புரை ஆற்றினார் .கண் சிகிச்சை முகாம் மாவட்ட தலைவர் முருகன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இலவச கண் சிகிச்சை முகாமில் மொத்தம் 63 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 23 நோயாளிகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் பொருளாளர் பரமசிவம்,ஜேக்கப் சுமன் மற்றும் செல்வ கணேசன் ஆகியோர் இணைந்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×