search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் கோலாகலம் : சோமநாத சுவாமி கோவில் விழாவில் 5 சப்பரங்களின் பவனி
    X

    விழாவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய காட்சி.

    ஆறுமுகநேரியில் கோலாகலம் : சோமநாத சுவாமி கோவில் விழாவில் 5 சப்பரங்களின் பவனி

    • விழா நாட்களில் தினசரி மாலையில் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
    • 9-வது நாள் காலையில் சுவாமி பிக்சாடன கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

    ஆறுமுகநேரி:

    திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    பச்சை சாத்தி சப்பர பவனி

    விழா நாட்களில் காலை, மாலை, சப்பரபவனி நடந்தது. தினசரி மாலையில் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    7-ம் நாள் திருவிழா அன்று நடராஜர், சிவகாமி அம்பாள் சிவப்பு பட்டு அணிந்து, செம்மலர் சூடி ருத்ரசொரூபமாக சிவப்பு சாத்தி சப்பரபவனி நடைபெற்றது.

    மறுநாள் காலையில் நடராஜமூர்த்தி வெள்ளைபட்டு உடுத்தி, வெண்மலர் சூடி பிரம்மா சொரூபமாக வெள்ளை சாத்தி பவனியும் இரவில் நடராஜர் மகாவிஷ்ணு சொரூபமாக பச்சை சாத்தி சப்பர பவனியும் நடைபெற்றது.

    9-வது நாள்

    9-வது நாள் காலையில் சுவாமி பிக்சாடன கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் டி.சி. டபிள்யூ நிறுவனம் சார்பில் செய்யப்பட்டது. நிறைவு நாளான நேற்று காலை சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனியும். தீர்த்தவாரி அபிஷேகமும் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவில் சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து 5 சப்பரங்களின் பவனி தொடங்கியது. இதன்படி மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், ரிஷப வாகனத்தில் அம்பாள் சகித சோமாஸ்கந்த மூர்த்தியும், மற்றொரு ரிஷப வாகனத்தில் பிரியாவிடை அம்பாளும், சப்பரத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர்.

    வாத்தியங்கள் முழங்க....

    மேளதாளம் மற்றும் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க 5 சப்பரங்களின் பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சப்பரம் சுமந்த சீர்பாத குழுவினர் 30 பேரை தொழிலதிபர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். பின்னர் சுவாமி. அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிறைவாக சண்டிகேஸ்வரர் பூஜையும், பைரவர் பூஜையும் நடைபெற்றது. பூஜைகளை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் நடத்தினார்.

    நிகழ்ச்சிகளில் அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், தொழிலதிபர்கள் பூபால்ராஜன், தியாகராஜன், பேராசிரியர் அசோக்குமார், தங்கமணி, அமிர்தராஜ், நடராஜன், கீழவீடு பாஸ்கர், கார்த்திகேயன், சிவராஜ், ராதா அம்மாள், 5-வது வார்டு கவுன்சிலர் தமயந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவசங்கரி, விஜிலா, கற்பக விநாயகம்,

    சங்கரலிங்கம், இளையபெருமாள், தவமணி, சேகர், முத்துச்சாமி, ராஜாமணி, அழகேசன், அனந்த நாராயணன், கந்தசாமி பாண்டியன், சிவகுமார், வெற்றிவேல், சுடர்மாரி, கந்தபழம், காந்தி ராமசாமி, ஐகோர்ட் துரை, வனகுமார், சிவன் பாய்ஸ் குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா பிள்ளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×