என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோலம், கபடி போட்டி- நாளை நடக்கிறது
- கோல போட்டியில் முதல் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்படுகிறது.
- கபடி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம் வழங்கப்படும்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான மாபெரும் கோலப்போட்டி, கபடி போட்டி மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்கலாம். கோல போட்டியில் முதல் பரிசாக பிரிட்ஜ், 2-ம் பரிசாக கிரைண்டரும், 3-வது பரிசாக மிக்ஸி வழங்கப்படுகிறது. தொடர்ந்து 12 பேருக்கு ஆறுதல் பரிசாக பிரஷர் குக்கர் வழங்கப்படுகிறது. கபடி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10ஆயிரம், 3-ம் பரிசு மற்றும் 4-ம் பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 9080404049 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






