என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசெட்லு திம்மராயசாமி கோவில் தேர்த்திருவிழா
    X

    தேரோட்டம் நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் திம்மராயசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சியையும் படத்தில் காணலாம்.

    குடிசெட்லு திம்மராயசாமி கோவில் தேர்த்திருவிழா

    • அதிகாலையில் சுப்ரபாத சேவை, அபிஷேகம், சாமிக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது.
    • விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், சுண்டல், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே,பேரிகை சாலையில் குடிசெட்லு கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா, நேற்று சிறப்பாக நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகள் கடந்த 1-ந்தேதி, பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்கார சேவை, யாகசாலை பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

    தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.முன்னதாக, அதிகாலையில் சுப்ரபாத சேவை, அபிஷேகம், சாமிக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமி எழுந்தருளினார். அப்போது பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்று பகுதி முழுக்கம் எழுப்பியவாறு தேரை இழுத்து சென்றனர்.

    விழாவையொட்டி, ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், சுண்டல், பஞ்சாமிர்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில், ஓசூர், பாகலூர் பேரிகை மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்தும், அத்திப்பள்ளி, சந்தாபுரா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினார்கள்.

    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×