search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடங்குடி கார்கோடகநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    கோடங்குடி கார்கோடகநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

    • கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.
    • கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது.

    1951-ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் கடைசியாக 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நிறைவுற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை விக்னேஸவர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    கும்பாபிஷேக தினமான நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.

    விக்னேஷ் சிவாச்–சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் கருவறையில் உள்ள கார்கோடகநாதர் சிவலிங்கதிற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலய அர்ச்சகர் கனேச சிவம் குருக்கள், ஐ.ஏ.எஸ். ஜெயந்தி ரவி, ராமமூர்த்தி ஐயர், சுந்தரேசர் ஐயர், ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஊராட்சி மன்ற தலைவர், கவிஞர் ராதா கிருஷ்ணன், தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×