என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் கும்மியடி திருவிழா
- முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், நெய் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
- திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நாக கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 4-ம் திருநாளனா நேற்று கும்மியடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு முளைப்பாரி பாடல்கள் பாடி கும்மி அடித்தார்கள். முன்னதாக மாலையில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், நெய் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடந்தது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக 3-ம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.