என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே தனியார் பஸ்சில் மின்விளக்குகள் உடைப்பு- டிரைவருக்கு மிரட்டல்
- நெல்லை சந்திப்பில் இருந்து தெய்வநாயக பேரிக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
- பஸ் மூன்றடைப்பு அருகே தோட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அதே ஊரை சேர்ந்த பாலு மற்றும் 6 பேர் சேர்ந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.
களக்காடு:
நெல்லை சந்திப்பில் இருந்து தெய்வநாயக பேரிக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது.
தகராறு
சம்பவத்தன்று இந்த பஸ்சை நெல்லை வண்ணார் பேட்டை இளங்கோநகர் கீழத்தெருவை சேர்ந்த கணபதி aமகன் காளி சரவணன் (33) ஓட்டிச் சென்றார்.
பஸ் மூன்றடைப்பு அருகே தோட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அதே ஊரை சேர்ந்த பாலு மற்றும் 6 பேர் சேர்ந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் பஸ்சில் வண்ண மின் விளக்குகளை போட்டு வரக்கூடாது என்று கூறி டிரைவர் காளி சரவணனிடம் தகராறு செய்தனர். மேலும் லைட்டு களையும் அடித்து உடைத்தனர். அத்துடன் டிரைவருக்கும் மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி அவர் மூன்ற டைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக பாலு உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story






