என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
- அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.
- இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும்.
கோவை:
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாசேதுங், செயலாளர் கோபால் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் குறித்து வக்கீல்கள் கூறியதாவது:-
ஆபத்தான சூழலில் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்கும் உச்சபட்ச கடமையை ஆற்றுவோர் ராணுவ வீரர்களே. அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.
ஓய்வூதியம், பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்குப்பின் கைவிடப்படும் வீரர்களின் நிலைமை என்ன ஆகும். ராணுவ வீரர்களுக்கு இதுதான் நிலை என்றால் மற்ற பல துறைகளிலும் இதைவிட மோசமான நிலை ஏற்படுத்தப்படும்.
இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை. இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும். இந்தியா முழுவதும் தங்களது வாழ்வியல் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களை புல்டோசர் கொண்டு அரசியலமைப்பு சட்ட மாண்புகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.